திருப்பதியில் இந்த வருடம் 2 பிரம்மோற்சவங்கள்... இன்று முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் ஆரம்பம்!

By காமதேனு

திருப்பதியில் இன்று அக்டோபர் 15-ம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. முன்னதாக கடந்த மாதம் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசித்தனர்.

இந்நிலையில், நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று அக்டோபர் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு கொடியேற்றும், கொடி இறக்கும் மற்றும் தேர் திருவிழா நிகழ்வுகள் இல்லை. தங்கத் தேரோட்டம் மட்டுமே நடத்தப்படும்.

திருப்பதி ஏழுமலையான் கோயில்

தற்போது புரட்டாசி மாதம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிகின்றனர். இதனால் கடந்த இலவச தரிசன டிக்கெட்டை திருமலை தேவஸ்தானம் ரத்து செய்தது. இந்நிலையில், நேற்று புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால் அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE