சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திடீர் மரணம்!

By காமதேனு

சாகித்ய அகாடமி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்ற மலையாள பெண் எழுத்தாளர் ஸ்ரீதேவி, உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.

பிரபல மலையாள எழுத்தாளரான கே.பி.ஸ்ரீதேவி, நம்பூதிரி பெண்களின் வாழ்க்கையை நாவல்களாக வடித்தவர். தனித்துவமிக்க அவரது எழுத்துக்கள் அவருக்கென்று மலையாளத்தில் நிரந்தரமான இடத்தை பெற்றுத் தந்தது.

'யக்ஞம்', 'பறைபெட்ட பந்திருகுளம்', 'அக்னிஹோத்திரம்' போன்ற பிரபல படைப்புகளை அவர் எழுதியுள்ளார். மிக இளம்வயதிலேயே எழுதத் தொடங்கிய ஸ்ரீதேவி, நாவல் மட்டுமில்லாமல் சிறுகதைகள், சிறுவர் இலக்கியங்கள் போன்றவற்றிலும், கதை சொல்லல், நாடகங்கள் என மலையாள இலக்கியத்திற்கு தனது இறுதிக்காலம் வரை பங்காற்றியுள்ளார்.

நம்பூதிரி பிராமண சமூக பெண்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படைப்புகளை எழுதி ஸ்ரீதேவி மிக பிரபலமானார். இவரது 'மூன்றாம் தலைமுறை' நாவல் அதிகளவில் வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. சாகித்ய அகாடமி விருது உட்பட கேரள மாநில விருது என பல்வேறு விருதுகளை தனது படைப்புகளுக்காக அவர் பெற்றுள்ளார்.

வயதுமுதிர்வு காரணமாக அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கே.பி.ஸ்ரீதேவி, கேரள மாநிலம் கொச்சியில், திருப்புனித்துராவில் அவரது மகனின் வீட்டில் வசித்து வந்தார். வயோதிகம் மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக நேற்று இரவு அவர் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்திற்கு மலையாள அரசியல்வாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


புகழ் குன்றா பொன்மனச் செம்மல் |எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ஸ்பெஷல்!

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புகைப்படங்கள்!

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டர் பக்கம் முடக்கம்!

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!

கலித்தொகையில் இருக்கிறது ஜல்லிக்கட்டு... அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE