ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!

By காமதேனு

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக ஹெச்.சி.எல் நிறுவனம் வரும் நிதியாண்டில் அனுபமில்லாத புதியவர்களாக 10 ஆயிரம் நபர்களை தங்களது நிறுவனத்திற்கு பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு

கொரோனா பொது முடக்க காலத்தில் அனைத்து துறைகளை போல், ஐடி நிறுவனங்களிலும் வருமானம் குறைந்தது. இதனால் இந்நிறுவனங்களில் செலவுகளைக் குறைக்க ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நடந்தது. மேலும் புதியதாக ஆட்களை பணியில் அமர்த்துவதும் குறைந்தது. இதற்கு இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவனமும் விதிவிலக்கல்ல.

இந்த நிலையில் பொருளாதாரம் சற்று சீரான நிலையில் புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க ஹெச்.சி.எல் நிறுவனம் முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி 10,000 பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்க ஹெச்.சி.எல் நிறுவனம் முன்வந்துள்ளது. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. ஹெச்.சி.எல். நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐடி நிறுவனங்கள் சரிவை சந்தித்து வரும் நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நாளை மகாளய பட்ச அமாவாசை: இந்த விஷயங்களை மறக்காதீங்க!

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்த வருஷம் கேம்பஸ் இன்டர்வியூ கிடையாது.. பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!

செம மாஸ் அறிவிப்பு... இன்று மெட்ரோ ரயிலில் பயணிக்க கட்டணம் கிடையாது!

மனைவி தற்கொலை... விரக்தியில் உயிரையிழந்த கணவர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE