நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்... குறைந்தது தங்கம் விலை!

By காமதேனு

நேற்று அதிரடியாக விலை உயர்ந்து விற்பனையான தங்கம் இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,430 ரூபாய்க்கும், ஒரு சவரன் 43,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,410 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 43,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 5,880 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 47,040 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி

வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.75.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 75,500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE