அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழை கொட்டும்... வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

By காமதேனு

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இது தவிர தென்மேற்கு பருவ மழை பெறும் மாவட்டங்களில் நல்ல மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த நாட்களில் இயல்புக்கு அதிகமாகவே மழை பெய்து வருகிறது.

மழை

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், திருச்சி, சேலம், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர் தேனி, தென்காசி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் சற்று கன மழை வரையிலும் மாலை ஆறு மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதையும் வாசிக்கலாமே...

பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!

பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை

க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!

இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்

மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE