ரூ.116 கோடியில் ஃபேன்ஸி அபார்ட்மெண்ட்... பாலிவுட் நட்சத்திரங்களை வாய்பிளக்கச் செய்த விராத்திகா குப்தா

By காமதேனு

மும்பையில் ரூ.116.42 கோடிக்கு ஒரு ஃபேன்ஸி அபார்ட்மெண்ட்டை வாங்கியதில், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் இந்திய தொழிலதிபர்களை வாய் பிளக்கச் செய்திருக்கிறார் விராத்திகா குப்தா என்ற ஃபேஷன் டிசைனர்.

விராத்திகா குப்தா அடிப்படையில் ஒரு ஆடை வடிவமைப்பாளர். ஆடம்பர வீட்டு அலங்கார நிறுவனமான ’மைசன் சியா’வின் நிறுவனராக பின்னர் தன்னை உயர்த்திக் கொண்டவர். தற்போது மும்பையின் ’த்ரீ சிக்ஸ்ட்டி வெஸ்ட்’ என்ற கடலைப் பார்த்த மிக உயரமான பன்மாடிக்குடிலில் ஒரு ஃபேன்ஸி அபார்ட்மெண்டை ரூ.116.42 கோடிக்கு வாங்கியதில் கவனம் பெற்றுள்ளார். 12,138 சதுர அடியிலான அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் எட்டு கார் பார்க்கிங் வசதிகள் இதில் அடங்கும். இந்த சொத்து பரிமாற்றத்துக்காக, முத்திரை கட்டணமாக மட்டும் ரூ.5.84 கோடியை விராத்திகா செலுத்தி உள்ளார்.

மும்பையின் கடல் பார்த்த சொகுசுக் குடியிருப்புகள்

இவர் இந்தியாவின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (என்ஐஎஃப்டி) மற்றும் பெர்ல் அகாடமி ஆஃப் ஃபேஷன் ஆகியவற்றின் முன்னாள் மாணவியாவார். அஞ்சுமன் ஃபேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஆடை வடிவமைப்பாளராக, இந்திய ஃபேஷன் உலகில் தனது இன்னிங்ஸை தொடங்கியவருக்கு அதன் பிறகு எல்லாமே ஏறுமுகம்தான்.

2011-ல் ’டூ ஒயிட் பேர்ட்ஸ்’ நிறுவனத்தில் வடிவமைப்பு இயக்குநராக உயர்ந்தார். நகுல் அகர்வாலை மணந்ததும் ’விராத்திகா - நகுல்’ நிறுவனம் மூலம் 2017-ல் தொழில்முனைவோராக மாறினார். இந்திய பாரம்பரியத்தில் மேற்கத்திய உணர்வுகளை கலந்து உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிப்பின் மூலம் அவரது தனித்துவ பாணியிலான பிராண்ட் வடிவமைப்புகள் வரவேற்பு பெற ஆரம்பித்தன.

2022-ல் ’மைசன் சியா’ என்ற சொகுசு வீட்டு அலங்கார பிராண்டை நிறுவினார். விராத்திகாவின் வித்தியாசமான கலை படைப்புகளால் ஈர்க்கப்பட்ட இந்திய கோடீஸ்வரர்கள், அவரது மைசன் சியாவின் உயர்தர தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர் ஆனார்கள். அதன் மூலம் விராத்திகாவும் அந்த கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்தார்.

`த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்' வளாகம்

தற்போது இந்தியாவின் பிரபல இரட்டைக் கோபுரமான `த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்' வளாகத்தில்ஃபேன்ஸி அபார்ட்மெண்ட் வாங்கியதில், பாலிவுட் நட்சத்திரங்களை வாய்ப்பிளக்கச் செய்திருக்கிறார். ’த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்’ என்பது ஆடம்பர 5 படுக்கயறை கொண்ட கோடீஸ்வரர்களுக்கான சொகுசுக் குடியிருப்பு திட்டமாகும்.

இரண்டு கோபுரங்களை உள்ளடக்கிய இதன் வளாகத்தில், ஒன்றில் ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டல் அமைந்துள்ளது. மற்றொன்றில் விராத்திகா போன்றோருக்கான, மேற்கு நோக்கி கடல் நோக்கிய தரிசனத்திலான சொகுசு குடியிருப்புகள் அமைந்துள்ளன. வெறுமனே கல்வி மற்றும் தனிப்பட்ட முயற்சிகள் மூலம் மட்டுமே தனித்தடம் பதித்திருக்கிறார் விராத்திகா குப்தா.

இதையும் வாசிக்கலாமே...

அயோத்தியில் கோயில் கட்ட மோடியைத் தான் ராமர் தேர்வு செய்தார்: அத்வானி திடீர் புகழாரம்!

அமலாக்கத்துறை நெருக்கடி... ஜன.18-ம் தேதி ஆஜராக அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 4வது முறையாக சம்மன்!

இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும்: மாயாவதிக்கு காங்கிரஸ் வேண்டுகோள்!

ராமர் கோயில் கும்பாபிஷேகம்... சர்ச்சைக்குள்ளான பெயர் பலகை!

திருநங்கை அப்சராவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: பிரபல யூடியூபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE