இந்திய மருந்துக் கட்டுப்பாடு ஆணையமான, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), இந்தியாவில் Norris Medicines என்ற மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஒரு இருமல் மருந்து மற்றும் ஒரு அலர்ஜி எதிர்ப்பு மருந்து ஆகியவற்றில் நச்சுக்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு இருமல் மருந்தால், கடந்த சில மாதங்களாக கிட்டத்தட்ட 141 குழந்தைகள் உலகம் முழுவதும் இறந்துள்ளனர் என்ற செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மருந்தில், கலப்பட டைஎத்லைன் க்ளைகால் அல்லது எதிலின் க்ளைகால் diethylene glycol (DEG) or ethylene glycol (EG)) ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து வழங்கப்பட்ட ஒரு சில குழந்தைகள் இறந்து போயினர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையொட்டி இந்த இருமல் மருந்துகள் அனைத்துமே இந்தியாவில்தான் தயாரிக்கப்பட்டன என்ற செய்தி வெளியானது. அப்போதே இது பற்றி பரபரப்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இதேபோல கடந்த ஆண்டு ஜாம்பியா, உஸ்பெகிஸ்தான், மற்றும் கேமரூன் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் இறந்த போன போது அந்த மருந்துகளில் என்ன கலப்படம் காணப்பட்டதோ, அதே போல மீண்டும் இப்போது நடந்திருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், டைஎத்லைன் க்ளைகால் அல்லது எதிலின் க்ளைகால் கலப்படம் பற்றி முதல் முறையாக மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு தனது மாதாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனால் எந்த நாடுகளில் எல்லாம் இந்த மருந்து தற்போது புழக்கத்தில் இருக்கிறது என்பதை கண்டறியும் முயற்சியில் இந்த கண்காணிப்பு அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!
வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!
ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!
உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!