குட்நியூஸ்...பொங்கல் பண்டிகைக்காக தாம்பரம் - கோவை சிறப்பு ரயில்!

By காமதேனு

பொங்கல் பண்டிகைக்காக தொடர் விடுமுறையை ஒட்டி வரும் ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமையில் தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக திங்கள் மற்றும் புதன் அன்று தூத்துக்குடியில் இருந்து இந்த ரயில் தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகள் கூட்டம் (கோப்பு படம்)

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பணிபுரிவோர் பொங்கல் பண்டிகையையொட்டி, தற்போது சொந்த ஊர் திரும்பி வரத்தொடங்கியுள்ளனர். இதனால் பஸ், ரயில்களில் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

ஆம்னி பஸ்கள் உள்பட அனைத்திலும் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தன. இதனால், பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்

அதன்படி, ஜனவரி 14,16-ம் தேதிகளில் காலை 7.30 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். ஜனவரி 15,17-ம் தேதிகளில் காலை 6 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த நிலையில் பொங்கலையொட்டி கோவையில் இருந்து தாம்பரத்திற்கு ஜன.16,17-ம் தேதிகளில் இரவு 8.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து கோவைக்கு ஜன.17,18-ம் தேதிகளில் காலை 7.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயிலில் 12 ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டிகள், 2 படுக்கை வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் நெல்லை வரை பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

‘இந்தியாவின் 4 சங்கராச்சாரியார்களும், ராமர் கோயில் விழாவை புறக்கணித்திருக்கிறார்கள்’

சென்னையில் அயலகத் தமிழர் தினவிழா: 58 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பு!

'ஜாலியாக இருக்கலாம்... தனியா வா' 9-ம் மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆசிரியர்!

ப்பா... திக்குமுக்காடி போன ரசிகர்கள்... வைரலாகும் நடிகையின் போட்டோஷூட்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE