பரபரப்பு... எழும்பூரில் திடீரென தடம் புரண்ட ரயில் எஞ்சின்!

By காமதேனு

எழும்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து ரயில் எஞ்சினை மீட்கும் பணியில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

எழும்பூரில் தடம் புரண்ட ரயில் எஞ்சின்.

புதுச்சேரியில் இருந்து பயணிகளுடன் வந்த விரைவு ரயில் இன்று காலை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. ஒன்றாவது மேடையில் நின்றிருநத ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்வதற்காக சேத்துப்பட்டு பணிமனையில் இருந்து ரயில் எஞ்சின் எழும்பூர் ரயில் நிலையம் நோக்கிச் சென்றது.

அந்த ரயில் இன்ஜின், எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை அருகே வரும் போது திடீரென தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. பின்னர் தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட ரயில் எஞ்ஜினை மீட்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தால், ரயில் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு... முதல்வர் துவங்கி வைக்கிறார்!

துணைமேயரை கொல்ல முயன்றது திமுக வட்டச் செயலாளரா?: மதுரை அரசியலில் பரபரப்பு!

பரபரப்பு... அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் திடீர் ராஜினாமா!

இன்று தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம்... தொழிற்சங்கங்கள் அதிரடி!

பொங்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பே உரிமைத்தொகை: வங்கிக் கணக்கில் வரவானதால் மகளிர் மகிழ்ச்சி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE