வற்றியது மேட்டூர் அணை; நீர்திறப்பு நாளை முதல் நிறுத்தம்... கதறும் காவிரி டெல்டா விவசாயிகள்!

By காமதேனு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பை நாளை முதல் நிறுத்த நீர்வளத்துறை முடிவுசெய்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12ம் தேதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. அதே நேரம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் தண்ணீர் வரத்து குறைந்தது.

மேட்டூர் அணை கட்டிய 90 ஆண்டு கால வரலாற்றில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அணையின் நீர்மட்டம் இந்த அளவு குறைந்தது இல்லை. கர்நாடக அரசும் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விடவில்லை. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை அணையில் இருந்து 91 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை

இந்த நிலையில், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பை நாளை முதல் நிறுத்த நீர்வளத்துறை முடிவுசெய்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31.72 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 139 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி ஏற்கெனவே கருகிப்போன நிலையில், சம்பா, தாளடியும் இப்போது பொய்த்து போயுள்ளதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

'இந்தி தெரிஞ்சவன் வாடா!’

இந்தியாவுக்கு வெளியே உலகின் மிகப்பெரும் இந்து கோயில்; நியூ ஜெர்ஸியில் இன்று குடமுழுக்கு!

அடுத்தடுத்து அதிரவைத்த நிலநடுக்கம்... நிலைகுலைந்த ஆப்கானிஸ்தான்; 320 பேர் பலி!

ஓசூர் அருகே பட்டாசு கடை தீவிபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி அறிவிப்பு!

இஸ்ரேலில் இருந்து மீட்கவேண்டும்... 18 தமிழர்கள் கோரிக்கை; அமைச்சர் மஸ்தான் தகவல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE