வேகமாக பரவும் டெங்கு... பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் கொடுக்கவேண்டும்; அரசு அதிரடி!

By காமதேனு

டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும் என்று அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் 30 பேர் வரையில் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

டெங்கு

இந்த நிலையில், டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும் என்று அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள 1,830 ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற சுகாதார நிலையங்களை ஒருங்கிணைத்து பரிசோதனை கருவிகளை அரசு வழங்கியுள்ளது. 23,000 மருத்துவ பணியாளர்கள் டெங்கு தடுப்பு சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'இந்தி தெரிஞ்சவன் வாடா!’

இந்தியாவுக்கு வெளியே உலகின் மிகப்பெரும் இந்து கோயில்; நியூ ஜெர்ஸியில் இன்று குடமுழுக்கு!

அடுத்தடுத்து அதிரவைத்த நிலநடுக்கம்... நிலைகுலைந்த ஆப்கானிஸ்தான்; 320 பேர் பலி!

ஓசூர் அருகே பட்டாசு கடை தீவிபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி அறிவிப்பு!

இஸ்ரேலில் இருந்து மீட்கவேண்டும்... 18 தமிழர்கள் கோரிக்கை; அமைச்சர் மஸ்தான் தகவல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE