சிங்கப்பூரில் தாண்டவமாடும் கொரோனா... 2 வாரங்களில் 2 ஆயிரம் பேருக்கு தொற்று!

By காமதேனு

சிங்கப்பூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர்

2019-ல் முதன் முதலாக சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகையே ஆட்டி படைத்தது. முக கவசம், தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவற்றின் பாதிப்பு குறைந்தது. இதனால் பல நாடுகளில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. ஆனால் சிங்கப்பூரில் இதற்கு மாறாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

அதன்படி கடந்த இரு வாரங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ’’கடந்த ஆண்டை போல இன்னொரு கொரோனா அலை இங்கு வரலாம். எனவே முக கவசம், தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE