தமிழ்நாட்டில் கோமாரி நோய் பரவும் அபாயம்... மத்திய அரசு தான் காரணமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க செப்டம்பர் மாதம் போட வேண்டிய தடுப்பூசிகளை மத்திய அரசு இன்னும் தமிழகத்திற்கு அனுப்பாததால் இதுவரை போடவில்லை என்பதால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பருவமழை, வெயில் காலங்களில் மாடுகள், கன்றுகளை கானை நோய் என்னும் கோமாரி நோய் கடந்த காலத்தில் அதிகளவு தாக்கியது. இந்நோயைக் கவனிக்காமல், சிகிச்சை அளிக்காமல் விட்டால் மாடுகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்நோயால் மாடுகள் உயிரிழப்பு குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, மாடுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது போன்ற பாதிப்புகளால் கால்நடைகளை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.

தடுப்பு ஊசி முகாம்

அதனால், ஆண்டுதோறும் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தமிழகத்தில் மாடுகளுக்கும், 4 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகளுக்கும் கோமாரி தடுப்பூசி போடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 76 மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசிப் போடப்படும்.

தற்போது அக்டோபர் கடைசியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் செப்டம்பர் மாதத்திலேயே தடுப்பூசிகள் போடப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போட வேண்டிய தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பு மருந்து மத்திய அரசால் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை என்பதால், மாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.

இதுகுறித்து கால்நடை துறையினர் கூறுகையில், ‘‘ கடந்த 10 ஆண்டாக இந்த நோயைத் தடுக்க மாடுகளுக்கும், கன்றுகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாதம் நோய் வருவதைத் தடுக்க போலி தடுப்பூசி எப்படி போடப்படுகிறதோ அதுபோல், கோமாரி முற்றிலும் ஓழிப்பதற்கான திட்டமாக இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

ஆரம்பத்தில் இந்த தடுப்பூசியை மாநில அரசு மாடுகளுக்கு போட்டு வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் மத்திய அரசு தமிழகத்திற்கான தடுப்பூசிகளை வழங்கி வந்தது. செப்டம்பர் மாதம் போடுவதற்கான தடுப்பூசி தற்போது வரை எந்த மாவட்டத்திற்கும் அனுப்பவில்லை, ’’ என்றனர்.

ஆனால், மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை உயர் அதிகாரிகள் ‘‘மதுரை மட்டுமில்லாது எந்த மாவட்டத்திற்கு இன்னும் கோமாரி தடுப்பூசி வரவில்லை. விரைவில் வந்ததும் போடப்படும், ’’ என்றார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்

விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE