அக்னியை வலம் வந்தால் தான் 'இந்து' திருமணம் செல்லும்... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

By காமதேனு

அக்னியைச் சுற்றி ஏழு அடி நடந்து வந்தால்தான் அது திருமணமாக கருதப்படும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருமணம் தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. சிக்கிம் சிங் என்பவர் தனது மனைவி தன்னை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்தார். இதனை எதிர்த்து ஸ்மிருதி சிங் என்ற அந்த பெண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் குமார் சிங், “திருமணம் என்ற வார்த்தையின் அர்த்தம், திருமணத்தை முறையான சடங்குகளுடன் நடத்தப்பட வேண்டும் என்பதுதான். ஆகையால், திருமணம் முறையான சடங்குகள் இல்லாமல் நடத்தப்பட்டால் அதைத் திருமணமாக கருத முடியாது.

முறையாகத் திருமணம் நடைபெறவில்லை என்றால் தற்போதைய சட்டப்படி அதைத் திருமணமாகவே கருத முடியாது. அதன்படி, இந்து சட்டத்தின் கீழ் ‘சப்தபதி’ எனப்படும் அக்னியைச் சுற்றி வரும் சடங்கு தவிர்க்கவே கூடாத ஒன்றாகும். ஆனால், இந்த வழக்கில் ‘சப்தபதி’ நடந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை” என்று அவர் தெரிவித்தார். இந்து திருமணச் சட்டம், 1955-ன் பிரிவு 7-ஐ அலகாபாத் உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த சட்டத்தின்படி இந்து திருமணம் என்பது முறையான சடங்குகளைக் கடைபிடித்து நடக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மணமகனும், மணமகளும் அக்னியைச் சுற்றி 7 அடி நடக்கும் சப்தபதி சடங்கும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதில், ஏழாவது அடி எடுக்கும்போது தான் திருமணம் முழுமையாவதாகக் கருதப்படுகிறது.

திருமண விழா

இந்த வழக்கில் நீதிபதி மேலும் கூறுகையில், “சப்தபதி சடங்கு குறித்து புகாரிலும் சரி, நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதத்திலும் சரி எந்தவொரு தகவலும் இல்லை. எனவே, இரண்டாவது திருமணம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமானதாக இல்லை. எனவே, அந்த பெண் குற்றம் செய்ததாக நீதிமன்றம் கருத முடியாது” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE