வனப்பகுதியில் அலர்ட்... நிபா ஓய்ந்த நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்!

By காமதேனு

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உயிரிழந்த காட்டுப்பன்றிகளின் உடலில் இருந்து ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளதால் கால்நடை துறையினர் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நிபா வைரஸின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார். இருப்பினும் மற்றவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.

தற்போது கேரளாவில் நிபா வைரஸ் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கோழிக்கோடு பகுதியில் அடுத்தடுத்து காட்டுப்பன்றிகள் உயிரிழந்தன. இதனால் சந்தேகம் அடைந்த கால்நடை துறையினர், உயிரிழந்த பன்றிகளின் உடலில் இருந்து திசுக்களை எடுத்து பரிசோதனைக்காக போபால் அனுப்பி வைத்திருந்தனர். அங்குள்ள ஆய்வுக் கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், காட்டுப் பன்றிகள் உயிரிழப்பிற்கு ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் நோயே காரணம் என தெரியவந்துள்ளது.

இருப்பினும் இந்த நோய் மனிதர்களைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் அது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என கால்நடை துறையினர் அறிவித்துள்ளனர்.

காட்டுப்பன்றி

இதே போல், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 200-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்ததற்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவலே காரணமாக இருந்தது.

தற்போது கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் ஜனகிக்காட் பகுதியில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால், வனப்பகுதியில் இந்த நோயை மேலும் பரவாமல் தடுக்க, வனத்துறையுடன் இணைந்து கால்நடை துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

இன்று கோலாகலமாக தொடங்குகிறது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா!

கார் ஓட்டக் கற்றுக்கொடுத்த மகன்; கிணற்றில் பாய்ந்து தந்தை உயிரிழப்பு!

செல்போன் விளையாட்டால் விபரீதம்; மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன்

பெரும் சோகம்... மாயமான 23 ராணுவ வீரர்கள்! தேடுதல் வேட்டை தீவிரம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE