அசத்தல்... தலையில் கியாஸ் சிலிண்டரோடு கரகாட்டம் ஆடிய பெண் கலைஞர்!

By காமதேனு

தலையில் கியாஸ் சிலிண்டருடன் கரகாட்ட பயிற்சி மேற்கொள்ளும் இளம் பெண்ணின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராம், யூடியூப் ரீல்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமீப காலமாக வித்தியாசமான முறையில் வீடியோக்களைப் பதிவு செய்து பலரும் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். குறிப்பாக இளம் பெண்கள் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த, இந்த சமூக வலைதளங்கள் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன.

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பயனாளர் ஒருவர் தலையில் சர்வ சாதாரணமாக கியாஸ் சிலிண்டர் ஒன்றை வைத்துக்கொண்டு இரும்பு பாத்திரம் ஒன்றின் மீது காலை வைத்து ஏறி நின்று ஸ்டண்ட் செய்து சாகசம் செய்துள்ள வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கரகம் துர்கா என்ற பெயரில் இயங்கும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துர்கா என்பவர், இதற்கு முன்பும் கரகாட்டத்தில் சாதிக்கும் வகையில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டுள்ளார். குறிப்பாக பாட்டில்களின் மீது தட்டை வைத்து அதன் மீது ஏறி நின்று கரகாட்டம் ஆடுவது போன்ற வீடியோக்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.

பல்வேறு மேடைகளிலும் இதுபோன்ற அசாத்தியமான அதிக பாரம் கொண்ட பொருட்களை தலையில் வைத்து கரகம் ஆடி அவர் வீடியோக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு சிலர் மிகவும் ஆபத்தான முறையில் உள்ள இது போன்ற வீடியோக்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், இதனை சமூக ஊடகப் பயனாளர்கள் ஆதரிக்கக் கூடாது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

சிங்கிள் டீ குடிக்கிறதுல இவ்வளவு ஆபத்தா... உயிரை விலை பேசும் ஆய்வு முடிவுகள்!

அவர் என்ன மாமனா... மச்சானா... பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய முதல் சண்டை

அதிர்ச்சி வீடியாே... கணவருடன் கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை

சரிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்; இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்!

இதுவரை 72 பதக்கங்கள்... ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா புதிய சாதனை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE