இந்தியாவில் ஒரே நாளில் 761 பேருக்குக் கொரோனா: பலி எண்ணிக்கையில் கேரளா முதலிடம்!

By காமதேனு

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா வைரஸ் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது என மக்கள் கொஞ்ச காலம் நிம்மதி பெருமூச்சு விட்டு இருந்தனர். இந்த நிலையில் உருமாறிய அதன் வேரியன்ட்கள் தொடர்ந்து அச்சுறுத்த தொடங்கிவிட்டன.

மேலும், ஜேஎன்.1 (JN.1) மற்றும் எச்.வி.1 (HV.1) போன்ற கோவிட் திரிபுகள் பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன. உலக சுகாதார நிறுவனமும் கோவிட் மற்றும் அதன் வேரியன்ட்கள் குறித்து அவ்வப்போது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ்

எனவே முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளைச் சுத்தமாக கழுவுவது போன்ற சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 761 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா பாதிப்பால் 12 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 4,423 என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 4,334 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா

இதில் கேரளாவில் அதிகப்பட்சமாக 1,249, கர்நாடகாவில் 1,240, மகாராஷ்டிராவில் 914, தமிழ்நாட்டில் 190, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் தலா 128 பேர் என கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளது.

மேலும் கொரோனா பாதிப்புக்கு புதிதாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர், கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் 4 பேர், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் 2 பேர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஒருவர் என கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சனிக்கிழமை `நோ லீவ்’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

பயங்கரம்... காதல் மனைவியை காரில் தரதரவென இழுத்துச் சென்ற கணவன்! பதறிய பொதுமக்கள்

விஜயின் அரசியல் மாஸ்டர் பிளான்... பிரம்மாண்ட மாநாட்டில் கட்சி அறிவிப்பு?

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபின் எந்த முன்னேற்றமும் இல்லை... சிஐடியு சௌந்தரராஜன் விமர்சனம்!

விண்வெளியில் மின்சாரம், தண்ணீர் தயாரித்து அசத்தல் - இஸ்ரோவின் மாபெரும் சாதனை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE