பயணிகள் ஷாக்… இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து!

By காமதேனு

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து இரவு கடைசியாக புறப்படும் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இன்று முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில், இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை இரவு 12.25 மணி முதல் சுமார் 2 மணிநேரம் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து இரவில் கடைசியாக புறப்படும் புறநகர் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு

அதாவது, இரவு 11.59 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அக்டோபர் 15-ம் தேதி தாம்பரத்தில் இருந்து 11.35 மணிக்கு புறப்படும் புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

கடவுளே என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்... நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!

அதிர்ச்சி... 4,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!

டாஸ்மாக் கடையை மூடுங்க... திமுக எம்.எல்.ஏ காலில் விழுந்து கதறிய இளம்பெண்!

நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு!

நாங்க மட்டும் ஓட்டு போடலையா? திமுகவுக்கு எதிராக கொந்தளித்த பெண்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE