3 நாட்களில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை... எவ்வளவு தெரியுமா?

By காமதேனு

ஆண்டின் தொடக்கத்தில் விலை உயர்ந்து விற்பனையான தங்கம், கடந்த மூன்று தினங்களாக விலை குறைந்து விற்பனையாகிறது. மூன்று தினங்களில் மட்டும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,870 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,960 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,860 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 46,880 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 6,330 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 50,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

தங்கம் விலை குறைந்து விற்பனையாகி வரும் நிலையில், வெள்ளி கிராம் 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 78,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அதிரடி! தமிழகம் முழுவதும் 1847 காவலர்கள் இடமாற்றம்!

முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: ஜன.9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

மம்தாவிடம் பிச்சை கேட்கவில்லை... காங்கிரஸ் கடும் கோபம்!

ஓடும் காருக்குள்ளேயே நடந்த கல்யாணம்! சினிமாவை விஞ்சிய காதல் ஜோடி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE