கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த டெங்கு... ஒரே மாவட்டத்தில் 8,000 பேர் காய்ச்சலால் பாதிப்பு!

By காமதேனு

மேற்கு வங்க மாநிலத்தில் 20 வயது இளம்பெண் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ள சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தா, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 8,000க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருதாஸ் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த அந்த 20 வயது மாணவி காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்தபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதே பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவரும் பித்தாநகர் மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவரும் டெங்கு காரணமாக கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்

டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல்கள் அதிகரித்து வருவதை அடுத்து மாநகராட்சி நிர்வாகங்கள் சார்பில் கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநில அரசும், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு நிறுவனங்களில் சுத்தப்படுத்தும் பணிகளைத் தீவிரமாக கண்காணிக்குமாறும், மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல்கள் அதிகரித்து வருவதால் மேற்குவங்க மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

கடவுளே என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்... நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!

அதிர்ச்சி... 4,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!

டாஸ்மாக் கடையை மூடுங்க... திமுக எம்.எல்.ஏ காலில் விழுந்து கதறிய இளம்பெண்!

நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு!

நாங்க மட்டும் ஓட்டு போடலையா? திமுகவுக்கு எதிராக கொந்தளித்த பெண்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE