தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு: மேலும் குறையவே வாய்ப்பு!

By KU BUREAU

இன்றைய காலை வர்த்தக நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. ஆடி மாதம் முழுவதுமே ஆபரண தங்கத்தின் விற்பனை மந்தகதியில் இருக்கும் என்பதால் தங்கத்தின் விலை மேலும் குறையவே வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. நேற்று (ஜூலை 22) தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

இந்த நிலையில் இன்று (ஜூலை 23) 22 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ.15 குறைந்து 6810 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து 54,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5578 ரூபாய்க்கும், சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,624 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் 95.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ 95,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE