இந்தியருக்கு `திருமதி உலக அழகி’ பட்டம்

By காமதேனு

மிஸஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற சர்கம் கௌசல் கிரீடம் சூடியுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற மிஸஸ் வேர்ல்ட் அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் சர்கம் கௌசல் பங்கேற்றார். மொத்தம் 63 நாடுகளிலிருந்து பங்கேற்ற திருமதி அழகிகளின் மத்தியில், இந்தியாவின் சர்கம் கௌசல் வென்றிருக்கிறார்.

காஷ்மீரத்தை சேர்ந்த சர்கம் கௌசல் விசாகப்பட்டினத்தில் ஆசிரியையாக பணிபுரிந்திருக்கிறார். இவரது கணவர் கடற்படையில் பணியாற்றி வருகிறார்.

21 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் இந்தியாவுக்கு திருமதி உலக அழகி பட்டம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2001ஆம் ஆண்டு அதிதி கவுரிகர் என்பவர் இந்தியா சார்பில் பங்கேற்று திருமதி உலக அழகி பட்டம் வென்றுள்ளார்.

1984ஆம் ஆண்டு முதல் திருமதி உலக அழகிக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மிஸஸ் அமெரிக்காவுக்கான போட்டிகள் நடைபெற்றதன் நீட்சியாக அப்போது ’மிஸஸ் வுமன் ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற தலைப்பில் திருமதி உலக அழகிக்கான போட்டிகள் நடைபெறத் தொடங்கின. பின்னர் இந்த தலைப்பு 1988 முதல் ’மிஸஸ் வேர்ல்ட்’ என்றானது. சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த திருமதி அழகியர் இந்த போட்டியில் பங்கேற்பார்கள். பெருமளவிலான வெற்றிகளை அமெரிக்காவே வென்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE