இரவில் இந்த 5 தவறுகளை செய்தால் ரொம்ப கஷ்டம் தான்: மருத்துவர்கள் எச்சரிக்கை

By KU BUREAU

சென்னை: இரவில் செய்யும் 5 தவறுகளால் உடல் எடை கூடும் என்றும், அதனால் உடல்நலன் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் சரியாக சாப்பிடாமல் இருப்பது பலருக்கு சகஜமாகி விட்டது. இந்த வரிசையில் பலர் பகலில் கடினமாக உழைத்து. இரவில் சாப்பிட்டு ஓய்வெடுக்கிறார்கள். ஆனால் இரவில் சாப்பிடுவது உடல் எடையைப் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், சில இரவு உணவு பழக்கங்கள் உங்களை அறியாமலேயே உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

உடல் பருமனுக்குக் காரணம் பொதுவாக வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகள்தான் காரணம். இதை பலரும் அறியாமல் அன்றாடம் செய்து வருகின்றனர். எனவே உடல்நிலையைப் பேணவும், உடல் எடையைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனாலும். இரவில் இந்த 5 தவறுகளை சரி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், உடல் எடையை குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சிலருக்கு இரவு உணவு முடிந்த உடனேயே காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் அது எடையை அதிகரிக்கச் செய்யும். காபியில் உள்ள காஃபின் தூக்கத்தை கெடுக்கிறது. இதனால் எடையைப் பாதிக்கலாம். அத்துடன் படிப்படியாக உடல் பருமனுக்கும் இது வழிவகுக்கிறது. அதே போல க்ரீன் டீ குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இரவு உணவிற்குப் பிறகு அதை எடுத்துக் கொண்டால் தீங்கு விளைவிக்கும். இரவில் க்ரீன் டீ குடித்தால் தூக்கக் கலக்கம் மற்றும் எடை அதிகரிப்பு ஏற்படும்.

தண்ணீர் குடிப்பது ஒரு கெட்ட பழக்கம் அல்ல, ஆனால் இரவு உணவிற்குப் பிறகு அதை உட்கொள்வது உடலுக்கு ஆபத்தானது. ஆயுர்வேதத்தின்படி, உணவுக்கு இடையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது. இது செரிமான செயல்பாட்டில் தலையிடுகிறது. எனவே, சாப்பிட்ட பிறகு, தண்ணீர் குடிப்பதற்கு முன் குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.

இரவு சாப்பிட்ட உடனே தூங்குவது நல்லதல்ல. இந்த தவறை பலர் செய்கிறார்கள். சாப்பிட்ட உணவு ஜீரணிக்க 10-15 நிமிட நடைப்பயிற்சி அவசியம். இல்லையெனில், செரிமானமின்மை காரணமாக, வாய்வு, எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

உணவுக்குப் பின் இனிப்பு சாப்பிடும் வழக்கம் இந்திய வீடுகளில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது திருப்தி உணர்வைத் தருவதாக நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் இரவு உணவிற்குப் பிறகு இனிப்புகளைச் சாப்பிடும்போது, ​​அது உடல் எடையை அதிகரிக்க உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. ஏனெனில், இரவில் குறைவான உடல் உழைப்பு காரணமாக அது உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE