பலாப்பழத்தை விஞ்சியது தேங்காய்: ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்

By காமதேனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயி ஒருவரது தோட்டத்தில் தேங்காய் ஒன்று பலாப்பழம் அளவில் பெரிதாக காய்த்துள்ளது. இதை சுற்றுவட்டாரப் பகுதியினரும், தோட்டக்கலைத்துறை அதிகாரிகளும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

தேங்காயுடன் விவசாயி குமரேசன்

தமிழகத்தில் தேங்காய் அதிகமாக விளையும் மாவட்டங்களில் மிக முக்கியமானது கன்னியாகுமரி. இங்குள்ள ஈத்தாமொழி பகுதி தேங்காய் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த ‘ஈத்தாமொழி தென்னை’ ரகத்திற்கு மத்திய அரசின் புவிசார் குறியீடே பெற்றுள்ளது. அந்த அளவிற்கு குமரி மாவட்டத்தில் அதிகளவில் தேங்காய் சாகுபடி நடக்கிறது.

குமரிமாவட்டம், குலசேகரம்புதூர் அருகே குருக்கள்மடம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்ற விவசாயிக்கு சொந்தமாக தென்னந் தோப்பு உள்ளது. இவரது தென்னந் தோப்பில் வழக்கம் போல் இன்று தேங்காய் வெட்டும் பணி நடந்தது. அப்போது அவரது தோட்டத்தில் ஒரு தேங்காய் பார்க்கவே, பலாப்பழம் போல் பெரிதாக இருந்தது.

அந்த தேங்காயை மேலே மூடியிருக்கும் சவரியோடு சேர்த்து எடைபோட்டுப் பார்த்தபோது 4 கிலோ 100 கிராம் எடை இருந்தது. பார்க்கவே பலாப்பழம் போல் பெரிதாக இருக்கும், இந்த தேங்காயை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE