பேசிக்கிட்டாங்க

By காமதேனு

மதுரை

காளவாசலில் இரண்டு இளைஞர்கள்...

"அழகர் எங்கே வந்துட்டு இருக்கார்னு கேட்டா பதில் சொல்லாம செல்லை நோண்டிக்கிட்டு இருக்கியே?!”

“பொறு மாப்பு. அழகர் டிராக் ஆப்ல அதைத்தான் பார்த்துட்டு இருக்கேன்.”

“பரவாயில்லை... மதுரை வரைக்கும் டெக்னாலஜி வளர்ந்திருக்கே. சூப்பர்டா!”

“மதுரை மாப்புக்கு மட்டுமில்லை, ‘ஆப்’புக்கும் ஃபேமஸ்டா மாப்ள!”

- பாளை பசும்பொன்,

மதுரை

தஞ்சாவூர்

சாலையோர பழக்கடை ஒன்றில்...

“பழங்கள்லாம், தலைதெறிக்க விலை சொல்றியேப்பா... நிறைய மீந்து, அழுகிப் போறதுக்கு, விலையைக் குறைச்சுக் கொடுத்தா எல்லாம் வித்துப் போயிடுமில்ல..?”

“என்னண்ணே பண்றது?! அப்படி வீணாப் போறதை ஈடு கட்டத்தான் விலையைக் கொஞ்சம் அதிகமா வச்சிருக்கேன்... அதுக்கே அலுத்துக்கிட்டா எப்படி?”

(வாடிக்கையாளர் எதுவும் பேசாமல் நடையைக் கட்டுகிறார்)

-வி ரேவதி,

தஞ்சை

தஞ்சாவூர்

கொடிமரத்து டீக்கடை அருகே இருவர்...

“மாப்ள! வாயேன்... டீ சாப்பிடலாம்.”

“ஆமா... பெரிய கவர்னரு... டீ பார்ட்டிக்கு கூப்பிடுறாரு. ஒன் பை த்ரீக்கே ஒருவாரம் அழுவுற ஆளு நீ... ஏன் இந்த வெட்டி பந்தா?”

“வரல்லேனா போ... டீச்செலவு மிச்சம்!"

“உன் செலவுக்கே உன்கிட்ட காசு இல்லைன்னு தெரியும்டா. வா நானே வாங்கித் தர்றேன்.”

- பா து பிரகாஷ்,

தஞ்சாவூர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE