10 புதிய உழவர் சந்தைகள்: மாலையிலும் செயல்பட அனுமதி#TNBudget2022

By காமதேனு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மீன் வளம் தொடர்பாக சொன்ன அறிவிப்புகள் வருமாறு:-

தமிழகத்தில் உள்ள 50 உழவர் சந்தைகளையும் சீரமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும். புதிதாக மேலும் 10 உழவர் சந்தைகளை அமைக்க 10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உழவர் சந்தைகளுக்கு காய்கறி வரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் சிறப்புத் திட்டம் தீட்டப்படும். இதற்கென கூடுதலாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தற்போது உழவர் சந்தைகள் காலையில் மட்டுமே செயல்படுகின்றன. சிறு தானியங்களை விற்பனை செய்ய வசதியாக இனி உழவர் சந்தைகள் மாலையிலும் செயல்பட அனுமதி வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தைக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE