சிபிசிஎல் நிறுவனத்தைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்

By கரு.முத்து

நாகப்பட்டினம் அருகே முட்டத்தில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் அருகே முட்டம் கிராமத்தில், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்துக்கு நிலங்களை அளித்த விவசாயிகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் ஒன்றிணைந்து, ‘பாதிக்கப்பட்ட விவசாயிகள் மறுவாழ்வு நலச்சங்கம்’ என்ற பெயரில் அமைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிறுவனம் தனது ஆலை விரிவாக்கப் பணிகளை கடந்த ஓராண்டாகச் செய்து வருகிறது. ஆலை விரிவாக்கத்துக்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

விரிவாக்கத்துக்காக நிலங்களைத் தரும் விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும், அந்த நிறுவனம் ஏற்கெனவே கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE