பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

கமுதி

முத்துமாரியம்மன் கோயில் வாசலில் இரு பெண்கள்...

“நீ எப்பவும் சனிக்கிழமைதானே நான்-வெஜ் சாப்பிட மாட்டேன்னு சொல்லுவே... இப்ப என்ன புதுசா ஞாயிற்றுக்கிழமைங்கற?”

“வழக்கமா ஞாயிற்றுக்கிழமை, நான்-வெஜ் சமைச்சு ஒரு பிடி பிடிப்பேன். இப்பத்தான் ஞாயிற்றுக் கிழமை லாக்டவுன் போட்டாச்சே. அதான் வெஜ் விரதத்தை அன்னைக்கி மாத்திக்கிட்டேன்.

“முழு லாக்டவுன்லயும் முட்டையாவது அவிச்சு சாப்பிட்ட ஆளுதானே நீ. இதுல என்ன ரூல்ஸெல்லாம் போட்டுக்கிட்டு!”

- எம்.கல்லூரி ராமன்,

கரிசல்புளி

தஞ்சாவூர்

மானம்புச்சாவடியில் டீக்கடை ஒன்றில் இருவர்...

“என்னப்பா இது... திடீர் மொட்டை?”

“ஞாயிற்றுக்கிழமைன்னு ஆரம்பிச்சு படிப்படியா எப்படியும் முழு லாக்டவுன் வந்துடும். கட்டிங் பண்ண முடியாம பரதேசி மாதிரி அலையிறதுக்கு... பேசாம மொட்டை போட்டுட்டு கம்னு திரியலாம்ல. எப்படி என் ஐடியா!”

“அறிவுடா! பார்த்து... மொட்டையிலேருந்து மூளை வெளியே வந்துடப்போகுது..!"

- பா து பிரகாஷ்,

தஞ்சாவூர்

வானவன்மகாதேவி

நியாய விலைக்கடை அருகே...

“என்னடா ரொம்ப டல்லா இருக்கே?"

“பொங்கல் பரிசுகூட ‘போன’ஸா ஒரு தொகையும் கிடைக்கும். சரக்குப் போட்டு சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சேன். என் ப்ளானெல்லாம் புஸ்வாணமாகிடுச்சு.”

“மக்கள் சந்தோஷத்துக்காக கவருமென்ட் பொங்கல் பரிசு கொடுத்தா... உங்க சந்தோஷத்துக்கு சரக்கு வாங்கவும் காசு தேவைப்படுது இல்ல? நீங்கள்லாம் எப்படா திருந்துவீங்க?”

-சு‌.சுதாகரன்,

வானவன்மகாதேவி

அவிநாசி - கோவை பயணத்தில்

“ஏன் கண்டக்டர்... இப்படி எல்லா ஸடாப்லையும் நிப்பாட்டுனா எப்படி ஊர் போய்ச் சேர்றது?”

“நீங்க எங்கே போகணும்?”

“கரும்பத்தம்பட்டி கூட் ரோடு”

“அது மட்டும் என்ன பைபாஸ்லயா இருக்கு? பஸ் எல்லாருக்கும்தான் சார். அட்ஜஸ்ட் பண்ணிக்கப் பழகிக்கோங்க.”

- கரு. செந்தில்குமார்,

கோவை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE