பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

வேதாரண்யம்

ராஜாஜி பூங்காவில் இருவர்...

“என்ன மாப்ளே... ஒரே பக்திப் பரவசமாத் தெரியிறியே... என்னடா விசேஷம்?”

“தண்ணி, சிகரெட் எல்லாத்தையும் நிறுத்திட்டேன் நண்பா. புது வருசத்துல இருந்து நான் புது மனுசனாகுறேன். ஆன்மிகத்துல இறங்கிட்டேன்.”

“ஆமாமா! போன நியூ இயர் அன்னைக்கு டாஸ்மாக் முன்னாடி டான்ஸ் ஆடிட்டு இருந்த உன்னை நான் தான் உன் வீட்டுக்குக் கைத்தாங்கலாக் கூட்டிட்டுப் போனேன். அப்பவும் நீ இதைத்தான்டா சொன்னே... அப்ரசண்டு!”

-ந.விஜய்ஆனந்த்,

தோப்புத்துறை

தஞ்சாவூர்

கொடிமரத்து மூலை டீக்கடையொன்றில்...

“கேட்டவுடனே டைரி குடுக்கும்போதே நினைச்சேன்டா... புது டைரியைக் கேட்டா பழைய டைரி குடுக்கிறே?”

“அட போன வருஷ டைரியா இருந்தா என்னடா? ஒரு எழுத்துகூட எழுதாம புத்தம்புதுசா இருக்கா இல்லையா?"

“டைரி புதுசா இருக்கோ இல்லையோ... நீ இன்னமும் திருந்தாம அரதப் பழசா இருக்கடா. பார்த்து இரு... போகியில போட்டுக் கொளுத்திடப் போறாங்க.”

- பா.து. பிரகாஷ்,

தஞ்சாவூர்

திருச்சி

டோல்கேட்டில் இருவர்...

“மாப்ள... ரெண்டு மூணு வாரத்துக்கு வீட்டுப் பக்கம் வந்துடாதடா.”

"ஏன்டா?"

“போன வாரம் சரக்கடிக்கப் போனதுக்கு உனக்கு ஒமைக்ரான்னு சொல்லித்தான் வீட்டுல காசு தேத்தினேன்.”

“ஊருக்குள்ள எதை எதையோ வச்சு ஃப்ராடு பண்ணுவாங்க. நீ ஒமைக்ரானை வச்சு ஃப்ராடு பண்ற... உன்னை மாதிரி ஆட்களுக்குன்னே தனியா ஊரடங்கு போடணும்டா!”

-சிவம், திருச்சி

கோவை

காந்திபுரம் டாஸ்மாக் அருகே...

“எதுக்குடா ப்ளாஸ்டிக் டம்ளர வாங்கிக் கழுவுற?”

“அதெல்லாம் அழுக்கா இருக்கும்டா. தூய்மைதான் மாப்ஸு மனுசனுக்கு முக்கியம்!”

“ஆமாமா! அதுல நீ ஊத்தி அடிக்கிற சரக்கு அமிர்தத்துல செஞ்சது பாரு! தண்ணியடிக்கப் போறதுக்கு முன்னாடியே தத்துவம் பேச ஆரம்பிச்சுடுறீங்களேடா.”

- கரு. செந்தில்குமார்,

கோவை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE