பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

திருச்சி

டாஸ்மாக் ஒன்றில்...

“தம்பி... கட்டிங், சேவிங் பண்ணணும். அதுக்கு...”

“ஏற்கெனவே சரக்கடிச்சிட்டுதான் வந்திருக்கீங்களா? இது டாஸ்மாக்! சலூன் கடை இல்லை.”

"அட! கட்டிங் காசை சேவிங்ஸ் பண்ணணும். விலை மலிவா எதாவது குடுன்னு சொன்னேம்ப்பா..!"

-சிவம்,

திருச்சி

திருக்குவளை

கடை ஒன்றில்...

“என்னண்ணே... காலண்டர்ல ‘ஒமைக்ரானே துணை'ன்னு போட்டிருக்கு?"

“ரெண்டு லாக் டவுன்ல மிச்சப்பட்ட சானிடைசர், மாஸ்க்கை எல்லாம் எப்படி விற்கிறது? அதான் வேண்டிக்கிட்டுப் போட்டுருக்கேன்!"

“விட்டா ஒமைக்ரானுக்குக் கோயிலே கட்டுவீங்க போலிருக்கே!?”

-சு.சுதாகரன்,

வானவன்மகாதேவி

வேதாரண்யம்

வடக்கு வீதியில் இரு இளைஞர்கள்...

“என்னடா மாப்ளே! மளிகை ஜாமான் வாங்க இப்படி மூணு நாலு கடைக்கு அலையிற. எல்லாத்தையும் ஒரே கடையில வாங்கலாம்ல?”

“ஒரே கடையில வாங்குனா மூணு நாலு காலண்டர் கிடைக்காது மாப்ளே.”

“ஏற்கெனவே வெட்டி ஆபீஸர் நீ. இப்போ காலண்டரா வாங்கி வச்சு டெய்லி பேப்பேர் கிழிக்கப்போற... இதுல ப்ளான் வேற!”

-ந.விஜய்ஆனந்த்,

தோப்புத்துறை

பொள்ளாச்சி

டாஸ்மாக் அருகே...

“என்ன மாப்ள... சரக்கு வாங்க மஞ்சள் பை தூக்கிட்டு வந்திருக்க?”

“சிஎம்மே மஞ்சள் பை திட்டத்தைத் தொடங்கி வச்சிருக்காரு. அரசாங்கம் சொல்றத மதிக்கிறவண்டா நான்.”

“குடிக்காதேன்னு கட்டுன பொண்டாட்டி தலையால அடிச்சுக்குது. அதைக் கேட்க வக்கில்ல... இவர் கவர்ன்மென்ட் பேச்சைக் கேட்கிறாராம்!”

- கரு. செந்தில்குமார்,

கோவை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE