பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

தஞ்சாவூர்

சாலையில் இரு பைக்-காரர்கள்...

“ஏம்பா... பின்னால பொண்ணு உட்காந்துட்டா எதிர்ல வர்ற வண்டி தெரியாதா? ஓரமாப் போற என் வண்டியில வந்து மோதுறே?!”

“குண்டும் குழியுமா இருக்கிற ரோட்டைப் பார்த்து ஓட்டுன்னு வொய்ஃப் சொல்றாங்க. நீங்க நேராப் பார்த்து ஓட்டுங்கிறீங்க... நான் என்ன பண்றது?”

“நியாயம்தான். ரோடு போடுறதுலயும் ஊழல் பண்றவனைத்தான் புடிச்சிக் கேட்கணும்... சரி, பார்த்து வீடுபோய்ச் சேரு.”

- பா து பிரகாஷ், தஞ்சாவூர்

நாகர்கோவில்

ஒரு சலூனில் இருவர்...

“மக்கா! பிக் பாஸ்ல அடுத்த எலிமினேஷன் யாரா இருக்கும்னு நினைக்கிறே?”

“கமலே கரோனான்னு தற்காலிகமா எலிமினேட் ஆகி, ரம்யா கிருஷ்ணனை அனுப்பிட்டாரு. நீ வேலைப் பொழப்பில்லாம அதையெல்லாம் ஒரு கேள்வின்னு கேட்கிற. முதல்ல போய் தடுப்பூசி போடு. அப்புறம் பிக் பாஸ் பாரு.”

- எ.முகமது ஹுமாயூன்,

நாகர்கோவில்

தஞ்சாவூர்

காய்கறி மார்க்கெட்டில் இருவர்...

“எப்பவும் நூறு கிராம் தக்காளி வாங்குவே... இப்போ ரெண்டு கிலோ தக்காளி வாங்குறியே... கையில காசு நிறைய இருக்கோ?

“ஆமா... நாளைக்கே இன்னும் விலை இருநூறு முந்நூறுன்னு போயிட்டா என்ன பண்றதாம்!?”

“உன்ன மாதிரி ஆளுங்க இப்படி வாங்கிப் பதுக்குற பாவத்துக்குத்தான் உருமாறிய வைரஸ் எல்லாம் ஊருக்குள்ளே வருது!”

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்,

தஞ்சாவூர்

கோவை

சுந்தராபுரம் ரேஷன் கடையில்...

“பில்லுக்குப் பணம் 105 ரூபாய் கேட்டா, எதுக்கு 100 ரூபாயோட தீப்பெட்டியையும் சேர்த்துத் தர்றே?”

“அஞ்சு ரூபாய் சில்லறை இல்லைன்னு நீங்க போனமுறை கொடுத்ததுதாங்கண்ணா!”

“நானும் கோயமுத்தூர்காரன்தான், உன் குசும்பெல்லாம் என்கிட்ட வச்சிக்காத தம்பி.”

“சும்மா ஜாலிக்கு... கோவிச்சுக்காதீங்கண்ணா!”

- பா.சக்திவேல்,

கோயம்புத்தூர்

கோவை

ஒத்தகால் மண்டபத்தில்...

“ஏன் பங்கு! டெய்லி சிக்கன் சமைச்சுச் சாப்பிட ஆரம்பிச்சுட்டீங்க போல?! ஆஃபீஸ்ல இன்க்ரிமென்ட் போட்டுட்டாங்களா?”

“நீ வேற... தக்காளி விக்கிற விலையில சிக்கன் சீப்பா இருக்குன்னு வாங்கி ஒப்பேத்துறோம். இது தப்பா?”

“சிக்கன் சமைக்கவும் தக்காளி வேணுமே... அதான் எப்படின்னு கேட்டேன்.”

- கரு. செந்தில்குமார்,

கோவை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE