பிரசவத்துக்குப் பிறகு இந்திய கழிப்பறை அபாயம்!?: அவ(ள்) நம்பிக்கைகள்-21

By டாக்டர் சசித்ரா தாமோதரன்

நம்பிக்கை :

"குளிர்ந்த நீரைப் பருகினால், குழந்தைக்கு சளி பிடிக்கும்?"

உண்மை :

"அப்ப சுடுதண்ணி குடிச்சா காய்ச்சல் வரணும் தானே..?"

இல்லை! அம்மாவுக்கு, சளி, இருமல் இருந்தால் மட்டுமே குழந்தையைச் சளி பாதிக்கும். அதனால்தான், சமீபத்திய கோவிட் தொற்றின்போது கூட, நோயால் பாதிக்கப்பட்ட தாய், மாஸ்க் அணிந்து பாலூட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டது.

உண்மையில் தண்ணீர் என்பது மிகச்சிறந்த மருந்து என்பதால், பிரசவத்துக்குப் பின், அதிக அளவு தண்ணீரைப் பருகுவது பல நன்மைகளைத்தான் தரும். தண்ணீரை குளிர்ச்சியாகப் பருகுவதும், வெதுவெதுப்பாகப் பருகுவதும் அவரவர் பழக்க வழக்கம்தான். சுத்தமான தண்ணீரை, அதிக அளவில் பருகுவது தாய்க்கும் சேய்க்கும் மிகவும் நல்லது.

நம்பிக்கை :

"இந்தியக் கழிப்பறையைப் பயன்படுத்தினால் சிசேரியன் அல்லது சுகப்பிரசவ தையலைப் பிரித்துவிடும்..?"

உண்மை :

Squatting என்ற குத்துக்காலிட்டு அமர்வது, கர்ப்பகால மற்றும் பேறுகால உடற்பயிற்சிகளில் முக்கியமான ஒன்றாகும். அடிவயிற்றுத் தசைகளை இது வலிமையாக்கும். ஆகவே, இந்தியக் கழிப்பறைகள் மிகவும் ஏற்புடையன. அதேபோல மாடிப்படி ஏறுவது, சம்மணமிட்டு அமர்வது என அனைத்தும் பிரசவத்துக்குப் பின்னர் ஏற்புடையது.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
கீரையும், கருவாடும்!: அவ(ள்) நம்பிக்கைகள்-20

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE