தொல்லியல் பார்வை

By ரமேஷ் முத்தையன்

பொறியியல் பட்டதாரியான எனக்கு, தொல்லியல் சார்ந்த இடங்களைத் தேடி பயணிப்பது என்றால் கொள்ளை பிரியம். அடிப்படையில் நான் ஒரு ஒளி ஓவியன் என்பதால், வெளியூர் புறப்பட்டால் எனது தோளில் கட்டாயம் கேமரா பேக்கும் தொங்கும். கடந்த 8 வருட எனது தொல்லியல் பயணத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்திருக்கிறேன். அப்படிச் சென்ற இடங்களில், என் கண்களுக்கு வித்தியாசமாக தெரிந்தவற்றை எல்லாம் எனது கேமராவுக்குள் ஆவணப்படுத்தி இருக்கிறேன். இனி வரும் நாட்களில் அவற்றில் சிலவற்றை காமதேனு வாசகர்கள் இங்கே ஆல்பமாக தரிசிக்கலாம்.

இந்த ஆல்பத்தில் நீங்கள் பார்ப்பது ரெங்கநாதர் கோயில். வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா எருக்கம்பட்டு கிராமத்தில் இருக்கிறது, இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE