நிழற்சாலை

By காமதேனு

காலத்தை வரையும் ஓவியன்

கிழிந்த கோணிப்பைக்குள்
ஓரிரண்டு மாற்றுடைகள்
பழைய பிளாஸ்டிக் டப்பாவுக்குள்
சாக்பீஸ்களும் கரித்துண்டுகளும்
ஒரே ஒரு தண்ணீர் குவளையுடன்
சாப்பாடு தட்டும்.
பிளாட்பாரம்தான் உலகம்
விரல்களின் நுனிகளில் மட்டும்
கோடுகளின் நளினம் வாழ்கிறது
காலையிலும் மாலையிலும்
நடைபாதைவாசிகளின்
கவனத்தைக் கவர்ந்திழுக்கிறான்
மதங்களைக் கடந்தும் இவனது
கலைநுட்பங்கள் புகைப்படப்பெட்டிக்குள்
தஞ்சம் புகுந்து வெளிநாட்டுப்
பத்திரிகைகளில் வெளியாகின்றன.
தார்ச்சாலைகளும் நடைபாதைகளுமே
இந்தக் கரித்துண்டு ஓவியனின்
பின்புலன்களாகத் தொடர்கின்றன.
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான்
நல்லதோர் சுவற்றை.

- கா.ந.கல்யாணசுந்தரம்

************************************************

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE