பேசிக்கிட்டாங்க

By காமதேனு

திருச்சி

டீக்கடை ஒன்றில்...
“ஒருவழியா டீக்கடையைத் திறக்க வழி பிறந்துடுச்சு… ஹேப்பிதானே அண்ணாச்சி?”
“ம்.. கடையைத் திறந்து என்ன பிரயோஜனம்? ஜனம் வரலையே?"
“சும்மா சாதா டீயும், காபியும் போட்டா யார் வருவா? எதாவது ஸ்பெஷலா ‘கரோனா காபி’, ‘கோவிட்- டீ’ன்னு வெரைட்டி காட்டுங்கண்ணே!"
“தம்பி... வியாபாரமே ஆகலைனாலும் பரவாயில்லை நீ வில்லங்கத்தைக் கிளப்பிட்டுப் போயிடாத. தயவுசெஞ்சு கிளம்பு!”
- சிவம், திருச்சி.

விருத்தாசலம்

பாலக்கரையில் தள்ளாடியபடி இருவா்...
“டேய் மாப்ள… டாஸ்மாக் திறந்திருக்காங்களே... இன்னைக்கு என்ன தினம் தெரியுமாடா?”
“தெர்ல மாம்ஸ். மண்டை ஒரேயடியா சுத்துத்து. நீயே சொல்லு...”
“இன்னைக்கு உலக ரத்ததான நாள்டா.”
“விடுடா நம்ம ரத்தத்தை எவன் தானம்மா வாங்க போறான். நோ யூஸ்..! நம்ம ரத்தம், நாடி, நரம்பு எல்லாமே அரசாங்கத்துக்குத்தான்!”
“ஹண்ட்ரட் மில்லியில ஒரு வார்த்தைடா!”
- இரா.ரமேஷ்பாபு, விருத்தாசலம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE