நிழற்சாலை

By காமதேனு

வறுமை

ஒளி கசிந்த கூரை ஓட்டையில்
ஓயாமல் சிந்துகிறது மழை
பாலுக்காக அழுதுகொண்டே இருக்கிறாள்
குட்டி லட்சுமி
வீடு திரும்பவிருப்பவனிடம்
மதுவின் வாசனை தவிர
மிச்சம் எதுவும் இருக்காது
யாரைச் சொல்லி அழ!
புயலடித்தால் தாங்காத சின்னக் குடிசையிலே
வாழவந்தவள் வாழ்வை வரமாய் தேடுகிறாள்!
பால் முகம் காணும் குழந்தையின்
பசி தீர்த்து பேரின்பம் காண!

- எஸ்.சுதாகரன்

*************************

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE