நிழற்சாலை

By காமதேனு

சஃபாரி

மலையென நிற்கும் பேருயிர் மீது
கால் வைத்து ஏற ஒப்பவில்லை மனது
பாழாய்ப்போன பேராசை மீற
காடு காணக் கிளம்பினோம் இரவில்
புணரும் புலிகள்மீது வெளிச்சம் பாய்ச்சினோம்
இரையைத் தவறவிட்டு
பயந்து பதுங்கின
வேட்டை விலங்குகள்
ஈன்றபடியே மானொன்று
இழுத்தோடியது நச்சுப்பையை
புலரும் பொழுதில்
ஆயிரமாயிரம் ஊணுயிர் வளர்க்கும்
காட்டின் பேரமைதி
காறி உமிழ்ந்து
வழியனுப்பியது எங்களை.

- கி.சரஸ்வதி

**********************************

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE