நிழற்சாலை

By காமதேனு

படிமங்கள்

இருளில் நீந்தும் படிமம் ஒன்று
சிறகுகளை விரிக்கிறது அநாதையாக...
தப்பிப்போன புறாவாக இருக்கலாம்
கூட்டத்தைத் தவறவிட்ட
இளங்காகமொன்றாகவும்
இருக்கக்கூடும்
ரகசிய சிறகசைவுகளின் வழியே
போன ஜென்மத்து நினைவுளை
மீட்டெடுக்கவோ
கூடு திரும்பவோ
தன்னைத் தொலைக்கவோ
வளைந்த கூரிய அலகுகளைக் கொண்டு
நட்சத்திரங்களை முத்தமிட்டிருக்கக்கூடும்
வசந்தங்களில்
நடந்த நிஜங்கள் கற்பனையாகப்போன இரவுகளில்
எத்தனை முறை தூங்காத நிலவினை
சிறகினில் சுமந்து திரிந்ததோ?
தொண்டைக்குள் உருண்டுகொண்டிருக்கும்
துயரங்களை
வெளியேற்றிவிட முடிகிறதா
உதிரும் நட்சத்திரங்களைவிட
வேகமாக உதிர்வதற்குத்தானே
அகாலத்தில் சிறகுகளை விரிப்பதும்!?

- தங்கேஸ்

என்றேனும் ஒரு நாள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE