உலக சுற்றுச்சூழல் தினம்: கரூர் நீதிமன்ற வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, கரூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட வனத்துறையுடன் இணைந்து கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான ஆர்.சண்முக சுந்தரம் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து மகளிர் நீதிமன்ற நீதிபதி பி.தங்கவேல், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சி.சொர்ணகுமார்,மாவட்ட வன அலுவலர் சண்முகம், வன சரக அலுவலர்கள் தண்டபாணி, முரளிதரன் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டனர்.

இந்த நிகழ்வில் கரூர் பார் அசோஷியேன் தலைவர் மாரப்பன், செயலாளர் வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் அரசு, ஆல், மகிழம் உள்ளிட்ட பல்வேறு வகையான 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE