பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

வாலாஜா பேட்டை

பேருந்து நிலையத்தில் இருவர்...
“விளம்பரந்தாங்க எனக்குச் சோறு போடுது.”
“ஏன்... ஏதாவது விளம்பர ஏஜென்சி நடத்தறீங்களா?”
“அட இல்லீங்க... விடாம சீரியல் பார்க்கிற என் சம்சாரம் விளம்பர இடைவேளைலதான் எனக்குச் சாப்பாடு போடுவாங்க. அதைத்தான் அப்படிச் சொன்னேன்”
“உங்க பாடு பரவாயில்லீங்க. எங்க வீட்ல சீரியல் டைம்ல இடியே விழுந்தாலும் எந்திரிக்க மாட்டாங்க. நம்மளே தான் போட்டுச் சாப்பிட்டுக்கணும்!”
- தி. பழனிசாமி, வாலாஜா பேட்டை.

தஞ்சாவூர்

ரேஷன் கடை அருகே… கரைவேட்டிகள்
“ஹலோ… கரும்பை இங்கே ஒடிக்காதீங்க! அதெல்லாம் வீட்ல போய் வெச்சுக்குங்க!”
“கவர்ன்மென்ட் எனக்குத் தந்த கரும்பை நான் ஒடிப்பேன்… கடிச்சுக்கூட துப்புவேன். அதக் கேக்க நீங்க யாரு?”
“ஆமாமா... இங்கேயே கடிச்சிட்டு, அதிமுககாரன் இனிப்பில்லாத கரும்பைக் கொடுத்துட்டான்னு உங்க தலைவரை வெச்சு போராட்டம் பண்ணுவீங்க! தேவையா எங்களுக்கு?”
“அந்தப் பயம் இருக்கட்டும்”
- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE