பார்ட் பார்ட்டா பட்டியல் வெச்சிருக்கோம்!- பரபரப்பைக் கிளப்பும் ஸ்டாலின்

By காமதேனு

சானா
readers@kamadenu.in

கரோனா வைரஸின் புதிய வெரைட்டி இந்தியாவிலும் இறக்குமதியாகிவிடுமோ எனும் அச்சத்தில் உறங்கிக்கொண்டிருந்த பாச்சா, லண்டனிலிருந்து விமானம் மூலம் ஒரு விருந்தினர் வந்து தன் வீட்டுக் கதவைத் தட்டுவதுபோல கனவு கண்டுகொண்டிருந்தான். அந்தச் சமயம் பார்த்து பைக் அவனைத் தொட்டு எழுப்ப… அலறியடித்து அறையெங்கும் ஓடி பின் ஆசுவாசமானான். அதைப் பார்த்து இயந்திரக் குரலில் ஏளனமாகச் சிரித்த பைக், “என்னய்யா நீ. ஆளுநர்கிட்ட கம்ப்ளெய்ன்ட் கொடுத்தாலும் பதறாமச் சிரிக்கிற பழனிசாமி மண்ணுல இப்படி அநியாயத்துக்குப் பயந்து சாகுறியே!” என்று பரிகாசம் செய்தது.

“ஆமாமா, அவர் ஆளுநருக்கா பயப்படப் போறாரு? அமி...” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே பாச்சாவின் வாயைக் கபக்கென்று பொத்திய பைக், “வீக்கான உடம்பை வச்சுக்கிட்டு வீண் வம்பு எதுக்கு? வேலையைப் பார்ப்போம் வா” என்று அழைத்தது.

பட்டியலில் முதலாமவர், முதல்வராகும் முனைப்பில் முழுமூச்சுடன் முஷ்டி தட்டிக்கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின்.
எந்த பால் போட்டாலும் எகிறி சிக்ஸர் அடிக்கிற சி.எம்மாம் எடப்பாடியை என்ன செய்து வீழ்த்துவது என்று ஒரு கல்யாண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து சிந்தித்துக்கொண்டிருந்தார் திமுக தலைவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE