நல்லா பாத்துக்குங்க நானும் சிஎம் ஆகப் போறேன்!

By காமதேனு

எம்.விக்னேஷ்
vignesh.madurai@gmail.com

உலகின் பத்தாவது அதிசயமாக, (ஏற்கெனவே தமிழ்நாட்டில் எட்டு, ஒன்பது அதிசயங்களை நம் அமைச்சர்கள் சொல்லிவிட்டதால்) சைகைப் புயல் கடிவேலுவுக்குத் திடுக்கென்று ‘சி.எம்’ ஆசை வந்துவிட்டது. இந்தத் தகவல், கரோனா வைரஸ் போல கன்னாபின்னாவெனப் பரவ… முதல்வர் போட்டியில் கடிவேலுவும் இருக்கிறார் என்று பிரேக்கிங் நியூஸாகப் போட்டு பின்னியெடுக்க ஆரம்பித்தன செய்தி சேனல்கள்.

அன்றைக்கென்று பார்த்து, அரை மணி நேரம் ஷவரில் குளித்துவிட்டு, “சிங் இன் தி ரெயின்… ” என்று பாத்ரூமில் இருந்து பாடியவாறே வந்தார் கடிவேலு.

“ஆஹா வந்துட்டாங்கய்யா... வந்துட்டாங்கய்யா” என்று உதவியாளர் உதறலுடன் ஓடிவர… அவரைத் தடுத்து நிறுத்தி…
“என்னய்யா… என் டயலாக்கை நீ சொல்லுற?” என்று விசாரிக்கிறார் கடிவேலு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE