எனக்குக் கட்சியும் வேணாம்... ஒரு கொடியும் வேணாம்...

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

கரோனா விழிப்புணர்வு இருமல் செய்திகளால், யாருக்கும் போன் பண்ணவே பயந்து போர்வைக்குள் முடங்கிக்கிடந்தான் பாச்சா. கரோனா வைரஸையே கண்ணீர் விட்டு கதறவைக்கும் அளவுக்கு வாட்ஸ்-அப்பில் வந்துகொண்டிருந்த இலவச இம்சைகளைப் பார்த்ததும் இன்னும் பீதியுற்றவன், இருந்த இடத்தைவிட்டே நகரவில்லை.

இதைப் பார்த்து சிரித்த பறக்கும் பைக், “இருமல் காலர் ட்யூனுக்கு எதிரா கோர்ட்ல கேஸே போட்டுட்டாங்க பாச்சா. வாய்ஸ் மெசேஜ், வாட்ஸ் - அப் வதந்திகளுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா? ராஜ்ய சபா பஞ்சாயத்து, ரஜினி பிரஸ் மீட்டுன்னு அரசியலே அல்லோலகல்லோலப் பட்டுட்டு இருக்கு. தம்பி வா, தகராறு பண்ணலாம் வா” என்று அன்றைய பணிகளுக்கு பாச்சாவுக்கு முன்பே தயாரானது.

முதலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE