ஒரு சொல்தான் ஊரையே சுற்றுகிறது

By காமதேனு

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

ஈழத்து மண்ணிலிருந்து வந்திருக்கும் இன்னொரு கவிஞர் என்றாலும் அதற்கான பொதுச் சித்திரங்கள் எதுவும் இல்லாமல் வெளிவந்திருக்கிறது கவிதைத் தொகுப்பு. பக்கம் முழுவதும் ஆக்கிரமித்து வியாபிக்கும் கவிதைகளாய் இல்லாமல் பெரும்பாலும் மூன்று அல்லது 5 வரிகளுக்குள் அடங்கிவிடும் கவிதைகள். அதில் வெளிப்படும் அனுபவங்கள் வாசித்து தீராத ஒன்றாய் இருக்கின்றன. பூசணிப் பூவில் பூத்திருக்கும் மழைத் துளிகளைக் கொன்றுவிடும் மனிதன் வராமல் இருக்க பிரார்த்திக்கும் எளிய மனம்தான் கவிஞருக்கும் வாய்த்திருக்கிறது.

//சந்தோசமான தினமொன்றில்தான்
பட்டாசு
உடல் சிதறி இறக்கின்றது// என்ற வரிகள் ஹைக்கூ பாணியிலானது என்று ஒதுக்கிவைத்துவிட முடியாமல் கவிஞரின் மன நிலையை வெளிப்படுத்துவதாகவே உள்ளன.

//தாவ முடியாமல்
குரங்கை வரைவது எனக்குப் பிடிக்காது
தாவ முடியாமல்
நெருப்பை வரைவது
மிகவும் பிடிக்கிறது // வழக்கமான வாசிப்புக்குள்ளாக்கப்படும் கவிதையெனத் தள்ளி வைக்காமல் தாவிச் செல்லும் நெருப்புக்குப் பின்னால் உள்ள அரசியலையும் வலியையும் புரிந்துகொண்டால் கூடுதலாக வியக்கலாம்.
//தினமும்
மரத்தை இலைகள் அசைத்துப் பார்க்கின்றன
ஒரு நாள்
மரம் விழுந்து காட்டியது//  

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE