கிறுகிறுக்க வெச்ச கிச்சன் தர்பார்

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

லெமன் ஜூஸ் குடிக்கணும் போல இருந்துச்சு. ஃபிரிட்ஜ தெறந்து பாத்தா... ஒரு லெமன்கூட இல்ல. நேத்துத்தானே ஆறு லெமன் வாங்கிட்டு வந்தோம்னு குழம்பிட்டேன். அம்மிணியக் கூப்பிட்டு, “ஏம்பா... இங்கருந்த லெமனெல்லாம் எங்க?”ன்னு கேட்டா, தவில் வித்வான் மாதிரி கையத் தூக்கிக் காட்டுனாங்க. அஞ்சு வெரல்லயும் லெமன் தொப்பி.
“என்னாச்சு..?”ன்னு பதறிப்போய் கேட்டேன்.

“நடு விரல்ல நகச்சுத்தி வந்துருக்கு. வலி தாங்கல. பழத்தைச் சொருகினா சரியாயிரும்னு எதிர் வீட்டுல சொன்னாங்க”ன்னாங்க.
“அதுக்கு ஏன் அத்தன விரல்லயும்?”னு கேட்டா...‘‘அதுபாட்டுக்கு அடுத்த விரலுக்கும் தொத்திக்கிச்சுன்னா... 
அதான் முன் ஜாக்கிரதையா மத்த விரலுக்கும் தொப்பி போட்டேன்”னு சாமர்த்தியமா சிரிக்கிறாங்க. இதுல ஏதோ உள்குத்து இருக்குன்னு அப்பவே நடு மண்டைல மணி அடிச்சுது.

“சமையல் முடிச்சுட்டீல்ல”வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாம கேட்டேன். கிச்சனை எட்டிப் பார்த்தா புதுசா குடி வந்த வீடு மாதிரி அவ்ளோ சுத்தமா இருந்துச்சு. டைனிங் டேபிளைப் பாத்தா அதுவும் பப்பரைக்கான்னு காலியா கெடந்துச்சு.
“நீங்க மனுசனா... இல்ல மனுசனான்னு கேக்கறேன். பொண்டாட்டிக்கு ஒடம்பு சரியில்லன்னா அவனவன் தலைல வச்சு தாங்கறான்... நீங்க என்னடான்னா சோறு என்னாச்சுன்னு கேக்குறீங்க”ன்னு சவுண்டு விட்டாங்க.
“அதுக்கில்லம்மா... வீட்ல சமைக்கலைனா எடுப்புச் சாப்பாடு சொல்லிடலாமேன்னுதான் கேட்டேன்.”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE