தஞ்சாவூர்
டீக்கடையில் இருவர்...
``ஊட்டி கொடைக்கானல் போனா, இயற்கையை அனுபவிக்கலாம்! சொந்தம் கொண்டாடினா எப்படி? வெளிநாட்டிலே இருந்து வந்தா, வேலை செய்... சாப்பிடு... குடியுரிமை கேட்டா எப்படி?!''
``அதானே! டீக்கடைக்கு வந்தா உட்கார்... உரிமையா டீ சாப்பிடு... கடையையே உரிமை கொண்டாடினா எப்படி!?''
( டீக்கடைக்காரர் குறுக்கிட்டு)
``யப்பா டேய்... இடையிலே டீக்கு காசு கொடுக்கிறதுன்னு ஒண்ணு இருக்குடா... மறந்திடாதீங்க! பேச்சைப்பாரு!''
- தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்
ஆரிநத்தம்
டீக்கடையில் இருவர்...
``மனசே சரியில்ல மாப்ள... ஏதாவது கோயில்,குளம்னு போய்ட்டு வரலாம்னு இருக்கேன்!''
``அதுக்கு எதுக்கு மாம்ஸ் செலவு பண்ணி அங்கெல்லாம் நீங்க போயிக்கிட்டு... சிம்ப்பிளான ஐடியா ஒண்ணு இருக்கு... சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே..?''
``பரவாயில்லை... சொல்லு மாப்ள...''
``உங்க மனசு ரிலாக்ஸ் ஆகற வரைக்கும், வீட்டம்மாவை அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சிடுங்க!''
``அவளை அப்படி அனுப்பினா,மனசு சரியாயிடும்... அப்புறம் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு உடம்பு சரியில்லாம போயிடுமே!''
- ஆரிநத்தம், செ.விஜயன்