ட்ரெண்டுக்குத் தக்கன பேசும் ஜெயக்குமார்!

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

அந்த டீக்கடை முன்னால் பாச்சா சற்று தயங்கியபடியே நின்றுகொண்டிருந்தான். அவன் பர்ஸில் ஐம்பது ரூபாய்தான் இருந்தது. அதுவும் ஓர் ஓரத்தில் லேசாகக் கிழிந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏடிஎம் எதுவும் தென்படாததால், என்ன செய்வது என்று தயங்கிக்கொண்டிருந்தான் பாச்சா. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பறக்கும் பைக், "போய்க் குடுய்யா… நம்ம சேட்டன்தானே… வாங்கிக்குவாரு. பணமதிப்பு நீக்கம் பண்ண ரொக்கத்தை வச்சு ரொம்பப் பேரு சொத்தே வாங்கியிருக்காங்க…நீ என்னடான்னா…” என்று தைரியம் சொல்லித் தள்ளிவிட்டது.

டீக்கடைக்காரர் சிரித்துக்கொண்டே, “சரி அக்கவுன்ட்ல வச்சுக்கிறேன். எப்ப தருவீங்க?” என்று கேட்க, “ரஜினி கட்சி ஆரம்பிச்சதும்…” என்று அவரைத் திகைக்கவைத்துவிட்டு தேநீர் அருந்த ஆரம்பித்தான் பாச்சா. ஆசிரியர் பட்டியலும் வந்து சேர்ந்தது.
அன்று சூரிய கிரகணம் என்பதால், அதிக உயரத்தில் பறக்காமல் தரைக்குச் சற்று மேலேயே பத்திரமாகப் பறந்துசென்றது பைக்.
முதலில் அமைச்சர் ஜெயக்குமார்.

“நல்லாட்சி வழங்குறதுல நாட்டிலேயே முதலிடம் நாங்கதான்” கூட்டத்துக்கு நடுவே கூச்சமே இல்லாமல் பேசிக்கொண்டிருந்த அமைச்சருக்கு முன்னால் ஆஜரானான் பாச்சா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE