மாமா...  ஏம்மா வந்தாரு?

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

வாசக் கதவுல கை வைக்கிறப்பயே தன்னால திறந்துகிச்சு. வழக்கமா நான் வந்து நின்னு கதவைத் தட்டி... காலிங் பெல்லை மூணு தடவை அடிச்சாலும் வீட்டுக்குள்ர மனுசங்க இருக்கிற சுவடே தெரியாது. இன்னிக்கு என்ன அதிசயம்னு பார்த்தா... வழிய மறிச்சுகிட்டு வீட்டம்மிணியோட தாய் மாமன். “வாங்க... வாங்க”ன்னு என் வீட்டுக்கே என்னை வரவேத்தாரு.

 “இவரு வரப் போறதா மூச்சுக்கூட காட்டலியே...” அம்மிணிகிட்ட ரகசியமா கேட்டேன்.  “முந்தாநாள் நைட்டுத்தான் சொன்னேனே...” அப்படின்னாங்க. அவங்க பழக்கமே நான் படுத்தா உடனே தூங்கிருவேன்னு தெரிஞ்சு அந்த நேரத்துலதான் வெரி இம்பார்டன்ட் மேட்டர்லாம் சொல்வாங்க. அப்புறம் கேட்டா அப்பவே சொல்லிட்டேனேன்னு எஸ்கேப் ஆவாங்க. அரை மயக்கத்துல ஏதோ ரெண்டு வார்த்தை நம்ம காதுல விழுந்துருக்கும். அதனால எப்பவோ கேட்ட ஃபீலிங் வந்துரும். ஓ... சொல்லி இருந்தாங்க போல. நம்ம தான் மறந்துட்டோம்னு என்னை நானே ஏமாத்திக்குவேன்.

ரெண்டு பேரும் சாப்பிட உட்கார்ந்தோம். தோசை முறுவலா வந்து அவர் தட்டுல வுழுந்துச்சு. “எவ்ளோ நாளாச்சு... இப்படி டேஸ்ட்டா சாப்புட்டு”ன்னு அரை டஜனை உள்ள தள்ளுனாரு.  “மாவு தீந்துருச்சு”ன்னு சொல்லி என்னைய ரெண்டு தோசையோட எழுப்பிட்டாங்க.  “காலைல வாக்கிங் போவேன்... வரீயா”ன்னாரு. “நீங்க போய்க்குங்க”ன்னு சொல்லிட்டு நழுவிட்டேன்.
காலைல ஆறு மணிக்கு காலிங் பெல் அடிச்சுது. தொறந்தா வாட்ச்மேன். வேகமா கேட் சாவிய நீட்டுனவரு,  “இன்னியோட வேலைய விட்டு நின்னுக்கிறேனுங்க”ன்னாரு. அவரு முகம் செவ செவன்னு இருந்துச்சு. ஒக்கார வச்சு காபி குடிக்கிறியான்னு தாஜா பண்ணி விசாரிச்சா... மாமா நேத்து வந்ததுலேர்ந்து வாட்ச்மேன்கிட்ட வம்பு வளர்த்துருக்கார்னு புரிஞ்சுது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE