சார்... இன்னைக்கி செவ்வாய்கெழம!

By காமதேனு

உத்ரா
uthraperumal@gmail.com

ஆபீஸ் போறதுக்காக தினமும் காலையில 3 மணிக்கே எழுந்திரிச்சு ரயில புடிச்சி ஓடுற அவஸ்தை இருக்கே... யப்பாடி! அரைத் தூக்கத்துலயே போய் உக்கார இடமும் கிடைக்காம நின்னுக்கிட்டே போற சாபம் நம்ப எதிரிக்கும் வரக்கூடாது. அதுவும் கழிவறைக்குப் பக்கத்துல பயணம் அமைஞ்சுட்டா கேக்கவே வேணாம்.

அடிக்கடி கழிவறைக்குப் போற கேசுக சிலது தண்ணிய சரியா அமுக்கி விடாது... இன்னும் சிலது கதவை ஒழுங்கா சாத்தாது. “கதவைச் சாத்திட்டு போங்க... ஏற்கெனவே இங்க நிக்கமுடியல”ன்னு சொன்னா, என்னமோ அதுகளோட சொத்தை எழுதிக் கேட்டுட்ட மாதிரி முறைச்சுட்டு சாத்திட்டுப் போகுங்க. சிலபேரு உள்ள போயிட்டு வெளியில வந்தா ‘குப்’புன்னு வர்ற பீடி நாத்தம் குடலைப் புரட்டும். இதுல, கொஞ்ச நேரம் நம்ம பக்கத்துல நின்னு, ரிலாக் ஷேசன் வேற. கேட்டா, “எவ்வளவு நேரம்தான் சார் உக்காந்துட்டே வர்றது... அதான் இப்படி காத்தாட (காத்தாடவாடா... பீடி நாத்தமாடன்னு சொல்லுங்கடா) நிக்கலாம்னு...”ன்னு இழுப்பாங்க.

அன்னைக்கி ஆபீஸுக்கு லீவு போட்டுருந்தேன். மெதுவா எந்திரிக்கலாம்னு பாத்தா வழக்கம் போல மூணு மணிக்கே முழிப்பு வந்திருச்சு. அந்த இருட்டுல எங்கிட்டுப் போறது... அப்டியே அஞ்சு மணி வரைக்கும் உருண்டு புரண்டுட்டு இருந்துட்டு 5 மணிக்கு எந்திரிச்சு, கடைத்தெரு பக்கம் போகலாம்னு புறப்பட்டேன். வாசல்ல, நாலு வீடு தள்ளி குடியிருக்கிற நாகராஜ் எனக்காகவே காத்திருந்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE