புள்ளிகளால் நிறைந்த ஓவியம்

By காமதேனு

ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

ஓவியங்களில் பல வகைகள் உண்டு. வண்ணங்களைப் பயன்படுத்தும் விதம், வரையப்படும் மீடியம், ஓவியத்தின் கரு இவற்றைப் பொறுத்து ஓவியங்களை வகைப்படுத்தலாம். அவற்றில் அதிகம் பேருக்கு கைவராத ஓவிய வகைகள் இரண்டு. ஒன்று க்யூபிசம். இன்னொன்று புள்ளி ஓவியம்.

க்யூபிசத்தை எத்தனை பேர் முயன்று பார்த்தாலும் அவர்கள் ஏதோ ஒரு புள்ளியில் பிகாசோவிடம் தோற்றுப் போகிறார்கள். க்யூபிச ஓவியங்களில்  புகழ் பெற்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதுபோலத்தான் புள்ளி ஓவியங்களும். டிவிஷனிசம் என்றோ அல்லது பாய்ன்டிலிசம் என்றோ இதை அழைக்கலாம்.

புகைப்படத் துறையில் பிக்சல் என்று சொல்வார்கள். புகைப்படத்தின் புள்ளிகள்தான் பிக்சல். எல்லா வடிவ தொகுப்புமே அக்குவேறு ஆணி வேறாகப் பிரிக்கப்பட்டால் அது புள்ளியில் சென்றுதான் முடியும். அந்த வகையில் புள்ளிகளைக் கொண்டே ஓவியத் தொகுப்பை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர் ஜார்ஜஸ் பியரி சூரத். டிவிஷனிசம் அல்லது பாய்ன்டிலிசத்தின் தந்தை என்றே இவர் அழைக்கப்படுகிறார். ஓவிய வரலாற்றில் வெகு சிலராலேயே இந்த முறையைக் கற்றுக்கொண்டு தொடர முடிந்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE